#BigBreaking: நாளை எல்லாரும் வந்துடுங்க! பாஜக எம்.பி,க்களுக்கு அதிரடி உத்தரவு! முக்கிய மசோதா தாக்கல்!
BJP MP Parliament Bill
நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை தொடர்பான விரிவான மசோதாவை மத்திய அரசு கொண்டு வர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவிக்கையில், “இப்போதுதான் மக்களவைத் தேர்தல் முடிந்து, ஹரியானா, ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் சட்ட பேரவைத் தேர்தல்களும் நடந்தன. அடுத்து டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது.
இப்படி இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக அது அடிக்கடி தேர்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. எனவே, அனைத்து மாநில சட்டப்பேரவைகள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த என்ற முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆணையத்தின் அறிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது" தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், டிசம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பாஜகவின் அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்டாயம் மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு வந்திருக்க வேண்டும் என்று, பாஜகவின் தலைமை கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முக்கியமான மசோதாக்களின் மீதான விவாதம் நடைபெற இருப்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.