மதுரை மத்திய சிறை ரூ.100 கோடி ஊழல்: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு!
Madurai Central Prison Scam Case Chennai HC Order
மதுரை மத்திய சிறையில் மருத்துவ பொருட்கள், எழுது பொருட்கள், காகித உறைகள் ஆகியவற்றை கைதிகள் தயாரித்து வருகின்றனர்.
இதனை அரசு அலுவலகங்கள், மருத்துவ மனைகள், நீதிமன்றங்களுக்கு அனுப்பியதாக போலி கணக்கு தயாரித்து ரூ.100 கோடி வரை ஊழல் நடந்து உள்ளதாகவும், இந்த முறைகேட்டில் அப்போதைய சிறை கண்காணிப்பாளர், டி.ஐ.ஜி.களுக்கு தொடர்பு புகார் எழுந்தது.
கடந்த கடந்த 2016 முதல் 2021 மார்ச் மாதம் வரை முறைகேடு நடந்து உள்ளதாகவும், ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்பட்ட பொருட்களை லட்சக்கணக்கில் விற்றதாக கணக்கு காட்டி இந்தமுறைகேடு நடந்து இருப்பதாகவும், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் இதற்கான ஆதாரங்கள் பெறப்பட்டு உள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்ட சிறைத்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி, இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், "இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தியதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Madurai Central Prison Scam Case Chennai HC Order