முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் இனி வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம்...!! - Seithipunal
Seithipunal


திரிபுரா மாநிலத்தில் வரும் 16ஆம் தேதியும் நாகாலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி 27 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று இந்திய தேர்தல் ஆணையர் அறிவித்தார். இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த திரிபுரா தேர்தல் ஆணையர் சட்டப்பேரவை தேர்தலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளரிடம் பேசிய அவர் "திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேவையான அளவு துணை ராணுவ படையினர் திரிபுரா வந்தடைந்துள்ளனர். திரிபுரா முழுவதும் ரோந்து பணிகளில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். திரிபுரா மாநிலத்தில் சட்டவிரோத பணப்புழக்கம், போதைப்பொருள் உள்ளிட்டவை தடுக்க 14 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவின் பொழுது 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார். திரிபுரா மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் மார்ச் 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senior citizens disabled people can now vote from home


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->