பாலியல் குற்றச்சாட்டில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி.! பணியிடை நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


டெல்லி நிதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான ஐஏஎஸ் அதிகாரி ஜிதேந்திர நரேன், இதற்கு முன்பு அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைமைச் செயலாளராக பதவி வகித்தார்.

இவர் மீதும் ஆர்.எல்.ரிஷி என்ற மற்றொரு அதிகாரி மீதும் 21 வயது பெண் ஒருவர், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி இருவரும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக போர்ட்பிளேரில் உள்ள அபெர்டீன் காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் அளித்துள்ளார். இப்புகார் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்தமான் நிகோபார் தீவு காவல்துறை அனுப்பிய அறிக்கையில், 1990-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியான நரேனின் தரப்பில் கடுமையான முறைகேடு மற்றும் அதிகாரப் பதவியை தவறாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ள நிலையில், ஜிதேந்திர நரேன் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senior IAS officer caught in sexual assault sacked


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->