காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீரென விலகிய மூத்த தலைவர்!  - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர் முரளி தியோரா. இவரது மகன் மிலிந்த் தியோராவும் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பதவிகளில் இருந்து மும்பை காங்கிரஸ் தலைவராக இருந்தவர். 

இந்நிலையில் மெலிந்த் தியோரா காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீரென விலகி உள்ளார். இது குறித்து மெலிந்த் தியோரா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், 

'காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து விடுவித்துக் கொள்கிறேன். இதனால் காங்கிரஸ் உடனான 55 ஆண்டு உறவு முடிவுக்கு வருகிறது' என குறிப்பிட்டுள்ளார். 

காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையின் இரண்டாவது கட்டத்தை இன்று தொடங்கியுள்ள நிலையில் மெலிந்த் தியோரா கட்சியில் இருந்து விலகி உள்ளது பெரும் பின்னடைவாக கருதுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

senior leader suddenly left Congress party


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->