ஹோலி கொண்டாட்டத்தில் சோகம் - ஒரே நாளில் 7 பேர் பலி.!
seven peoples dird for drowned water in maharastra
நாடு முழுவதும் நேற்று ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அனைவரும் வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவியும், வண்ண பொடிகளை நீரில் கரைத்து அவற்றை மற்றவர் மீது ஊற்றியும் உற்சாகத்துடன் கொண்டாடினர்.
இந்த நிலையில், ஹோலி கொண்டாட்டத்தின்போது சில சோக சம்பவங்களும் நடந்துள்ளன. அதாவது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டம் கின்னாய் கிராமத்தில் இருந்து 5 பேர் நேற்று மாலை இந்திரயாணி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது, மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து தேசிய பேரிடர் பொறுப்பு படையினர், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு பணியில் ஈடுபட்டு 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
இதேபோன்று, தானே மாவட்டத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய நான்கு சிறுவர்கள், கை கால்களை கழுவுவதற்காக உல்லாஸ் ஆற்றிற்கு சென்றுள்ளனர். அப்போது 4 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புப் படையினர் நான்கு பேரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே நாளில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 7 பேர் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
seven peoples dird for drowned water in maharastra