பண்ருட்டி || துப்பாக்கியுடன் உலா வந்த வாலிபர்கள் - யூடியூப் பார்த்து தயாரித்தது அம்பலம்.!!
three peoples arrested for gun make in pandruti
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி அருகே வேலன்குப்பம் செல்லும் வழியில் உள்ள காடாம்புலியூர் கல்லான்குளம் அருகில் அய்யனார் கோயில் ஒன்றுள்ளது. இந்தக்கோயிலின் பின்புறம் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு சந்தேகப்படும் வகையில் மூன்று பேர் வந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள், சின்னபுறங்கனி கிழக்குத் தெருவைச் சேர்ந்த மணிகண்டன், வேலன்குப்பம் தெற்குத் தெருவை சேர்ந்த விக்ரம், பழைய பிள்ளையார்குப்பத்தைச் சேர்ந்த சந்தனபிரபு உள்ளிட்டவர்கள் என்பது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் சோதனை நடத்தியதில், பிளாஸ்டிக்கால் ஆன 122 செ.மீ நீளமுள்ள துப்பாக்கி ஒன்று இருப்பது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் அது தொடர்பாக விசாரித்ததில் அந்தத் துப்பாக்கி எலி மற்றும் அணில் ஆகியவற்றை வேட்டையாடுவதற்கு யூடியூப்பைப் பார்த்து தயாரித்து வைத்திருந்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.
English Summary
three peoples arrested for gun make in pandruti