கூகுள் மேப் உதவியுடன் கோவாவுக்குச் சென்ற குடும்பம் - நடுக்காட்டில் சிக்கிய அவலம்.! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் காரில் கோவாவுக்கு கூகுள் மேப் உதவியுடன் சென்றுள்ளது. அப்போது கூகுள் மேப் தவறாக வழியை காண்பித்ததால், அவர்கள் வழிமாறி கர்நாடகா மாநிலத்தின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் சிக்கிக் கொண்டனர். 

அந்த இடம் அடர்ந்த வனப்பகுதி என்பதால், மொபைல் நெட்வொர்க் வேலை செய்யவில்லை. இதனால், இரவு நேரம் முழுவதும் அவர்களுக்கு என்ன செய்வதென்று அறியாமல் அச்சமடைந்து காரிலேயே இருந்துள்ளனர்.

மறுநாள் காலை, மொபைல் நெட்வொர்க் உள்ள இடத்தைக் கண்டுபிடிக்க அவர்கள் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றுள்ளனர். பின்னர் அவசர உதவி எண்ணை தொடர்புகொண்டு, தங்களின் நிலைமையைத் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து உள்ளூர் போலீசார் விரைந்துச் சென்று அவர்களை காட்டில் இருந்து பாதுகாப்பாக மீட்டனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "பாதிக்கப்பட்டவர்கள் கூகுள் மேப்பைப் பின்தொடர்ந்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் பரேலி - பிலிபித் நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. காரில் குழந்தைகள் உள்பட சுமார் ஏழு பேர் இருந்தனர் என்றுத் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seven peoples go to forest for google map wrong root


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->