சிறுவயதில் இருந்து பாலியல் கொடுமை செய்த மாமா : மனைவிக்கு ஆதரவளித்த கணவர்..!
sexually harassment case arasted man
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் மாவட்டத்தில் பன்னாதேவி பகுதியை சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவர் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில், அந்த பெண் 11 வயது சிறுமியாக இருக்கும்போது அவரது மாமா தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமி, அவரது தாயாரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அந்த தாய் பேசாமல் இரு என பதிலளித்தார்.
இந்த சமயத்தை பயன்படுத்தி கொண்ட சிறுமியின் மாமா, 2011-ம் ஆண்டில் சிறுமிக்கு திருமணம் முடியும் வரை தொடர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அந்த பெண்ணின் கணவர் ஒரு ராணுவ வீரர். இவர் விருப்ப ஓய்வு பெற்று சொந்த தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். சில நாட்களுக்குப் பிறகு பெண்ணின் கணவர், உறவுக்காரரான மாமா வீட்டுக்கு போக அழைக்கும் போதெல்லாம் அவரது மனைவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சில நாட்களுக்குப் பிறகு இருவரும், மாமா வீட்டுக்கு சென்றபோது, அந்த நேரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அந்த பெண்ணிடம் தவறாக நடக்க அவரின் மாமா மீண்டும் முயற்சித்து உள்ளார். இதற்கு அந்த பெண், கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதற்கு அந்த பெண்ணின் மாமா நீ மறுப்பு தெரிவித்தால், உனது திருமண வாழ்க்கையை அழித்து விடுவேன் என்றும் பெண்ணின் கணவரை போலி வழக்கில் சிறையில் தள்ளி விடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அந்த பெண் தனது கணவரிடம் நடந்த விவரங்களை தெரிவித்துள்ளார்.
இத்தனை ஆண்டுகளாக நடந்த விசயங்களை புரிந்து கொண்ட அவரது கணவர், தனது மனைவிக்கு ஆதரவாக அனைத்து உதவிகளையும் செய்து உள்ளார். அதன்பின் அரசு வலைதளத்தில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து இந்த வழக்கை அலிகார் போலீசார் விசாரணைக்கு எடுத்துள்ளனர்.
English Summary
sexually harassment case arasted man