மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரியிடம் சிக்கிய ஷாருக்கான்! - Seithipunal
Seithipunal


இந்தி நடிகர் ஷாருக்கான் ஷார்ஜாவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் கலந்து கொண்டு தனி விமானத்தில் மும்பை திரும்பினார். ஷாருக்கான் உடன் அவருடைய செயலாளர் பூஜா பாதுகாவலர்களும் வந்துள்ளனர். விமான நிலையத்தில் அவர்களுடைய உடைமைகளை சோதனை செய்தபோது விலைமதிப்பு மிக்க கடிகாரங்கள் இருந்தது தெரிய வந்தது. இதன் காரணமாக ஷாருக்கானும் அவருடன் வந்தவர்களும் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் பரிசாக வந்ததாக ஷாருக்கான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அனைத்து பொருள்களையும் ரூ17.86 லட்சம் என மதிப்பீடு செய்தனர். ஷாருக்கானுடன் வந்த பாதுகாவலர் ரவி சிங் என்பவரின் உடமைகளில் இந்த பொருட்கள் அனைத்தும் இருந்ததால் விசாரணைக்கு பிறகு ஷாருக்கானும் அவரது செயலாளர் பூஜாவும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பணம் கட்டும் கவுண்டரில் சிக்கல் ஏற்பட்டதால் அவரால் உடனடியாக பணத்தை செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக அதிகாலை வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பின்னர் கடிகாரங்களுக்கான சுங்க வரி ரூ 6.83 லட்சத்தை ஷாருக் கான் தரப்பில் கட்டினர். அதன்பின்பு ரவி சிங் விடுவிக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் பொருட்களுக்கு அதன் மதிப்பில் 38.5% சுங்கவரியாக வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று ஷாருக்கான் 2011 ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து வரும் பொழுது ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்களைக் கொண்டு வந்து பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shahrukh Khan caught by the customs officer at airport


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->