சிவசேனா கட்சி, சின்னம் விவகாரம்.. தலைமை நீதிபதி சோனு சூட் அதிரடி.! - Seithipunal
Seithipunal


மராட்டிய மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் கட்சி மற்றும் சிவசேனா ஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வந்த நிலையில்  சிவசேனா கட்சியின் மூத்த மந்திரி ஏக்நாத்  ஷிண்டே தனது ஆதரவு  எம் எல் ஏக்களை கட்சிக்கு எதிராக திருப்பி  பாஜகவுடன் இணைந்து  மகராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றினார். 

மேலும், சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம்  முறையிட்டிருந்தார். கட்சியில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும்  அதனால் சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தனக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்திருந்தார் உத்தவ் தாக்ரே.

இந்நிலையில் இருதரப்பு கருத்துக்களையும் கேட்ட தேர்தல் ஆணையம்  கட்சி விதிகளை பரிசீலனை செய்து  மகாராஷ்டிரா முதல் மந்திரி இயக்குனர் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சியின் சின்னம் மற்றும்  பெயரை பயன்படுத்துவதற்கு அதிகாரம் வழங்கியது. இதற்கு எதிராக உத்தவ் தாக்ரே தரப்பு உச்ச நீதிமன்றத்தில்  முறையிட்டார். 

அதில், சிவசேனா கட்சி மற்றும் சின்னத்தை ஏக்நாத் ஷிண்டேவுக்கு வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க சொல்லி கோரிக்கை விடுத்து இருந்தார். நேற்று தலைமை நீதிபதி சந்திரசூட் முன்பாக இந்த மனுவை அவசர விசாரணைக்கு பட்டியலிட கோரியதால் முறையிடப்பட்டது. இந்த விசாரணையில் உரிய நீதிமன்ற வழிமுறைகளை பின்பற்றி முறையிடும்படியும் தலைமை நீதிபதி அறிவுறுத்தியிதை தொடர்ந்து, இன்று மீண்டும் உத்தவ் தாக்ரே தரப்பில் முறையிடப்பட்டது. 

இதனை விசாரித்த நீதிபதி சந்திரசூட், இன்று உச்சநீதி மன்றத்தில் அரசியல் சாசன அமர்வில் இன்று வேறு வழக்ககள் விசாரிக்கபட உள்ளதால், அதற்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என்று கூறி இந்த வழக்கை நாளை பிற்பகல் 3.30 மணிக்கு ஒத்தி வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shivsena party Icon issue uttar takkare case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->