வக்பு சட்டத்திற்கு எதிரான வன்முறை கலவரங்களில் அதிர்ச்சி; 10 ஆயிரம் பேர் போராட்டம்; கொடிய கொடிய ஆயுதங்களுடன், காவலரின் துப்பாக்கி பறிப்பு..!
Shock in violent riots against the Waqf Act
வக்பு திருத்த சட்டம் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது. ஜனாதிபதியின் ஒப்புதலுடன் குறித்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்காளம், திரிபுரா மற்றும் அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் சுதி, ஜாங்கிப்பூர் மற்றும் சாம்சர்கஞ்ச் பகுதிகளில் கடந்த 11-ந்தேதி பெரிய அளவில் போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட கும்பல் பல்வேறு இடங்களிலும் பொது சொத்துகளை சூறையாடியதோடு, வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. மேலும் பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த வன்முறையில், சாம்சர்கஞ்ச் பகுதியில் ஜாப்ராபாத் என்ற இடத்தில் வீட்டில் தந்தை மற்றும் மகன் கொல்லப்பட்டனர். மேலும், 3 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த வன்முறை தொடர்பாக முர்ஷிதாபாத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். முர்ஷிதாபாத்தில் தந்தை மற்றும் மகன் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 02 பேரும் அடங்கலாக தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் 09 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், வன்முறை பற்றி மாநில ஐநீதிமன்றில் அரசு சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 08 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை ஒன்றாக திரண்டனர். அவர்களில் ஒரு பிரிவினர் தனியாக பிரிந்து, 05 ஆயிரம் பேர் உமர்பூர் நோக்கி முன்னேறி சென்று தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென மூர்க்கத்தனத்துடன் நடந்து கொண்டதுகொண்டு போலீசார் மீது வீசி தாக்குதல் நடத்தினர். அத்துடன், அந்த கும்பல் போலீசாரிடம் இருந்த துப்பாக்கியைகளையும் பறித்து கொண்டனர். அத்துடன், அவர்களிடம் கொடிய ஆயுதங்களும் இருந்துள்ளன. இதனால், வன்முறையை கட்டுப்படுத்த சென்ற போலீசார், அவர்களுடைய அதிகாரிகளை பாதுகாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர் என அந்த அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளன.
English Summary
Shock in violent riots against the Waqf Act