அதிர்ச்சி!...சிலிண்டர் வெடித்து சிதறியதில் 4 பேர் உயிரிழந்த சோகம்! - Seithipunal
Seithipunal


ஹரியானா மாநிலம், பரிதாபாத் அருகே உள்ள பக்ரி கிராமத்தைச் சேர்ந்த சர்ஜீத் என்பவர், நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனது வீட்டில் உள்ள முதல் தளத்தின் அறையில் குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்ததாக சொல்லப்படும்  நிலையில், அதிகாலை 2.15 மணி அளவில் கேஸ் சிலிண்டர் கசிந்து வீட்டில் தீப்பிடித்து உள்ளது.

தொடர்ந்து  சிலிண்டர் வெடித்து சிதறியதால் வீடே அதிர்ந்த நிலையில், இந்த அதிர்ச்சியில் கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த கோர விபத்தில்  சர்ஜீத், அவரது மனைவி  மற்றும் இவர்களின் பேரன் ஆகியோர் சிக்கிய நிலையில், பக்கத்து வீட்டில் மாடியில் தூங்கிக்கொண்டிருந்த லட்சுமி மற்றும் அவரது மகன் மீதும் இடிபாடுகள் விழுந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து வீட்டிற்கு அருகே இருந்த அக்கம்பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் அங்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர்  மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில், சர்ஜீத், பபிதா மற்றும் நகுல் ஆகியோர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்  பக்கத்து வீட்டை சேர்ந்த லட்சுமியும், அவரது மகனும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு  அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிக்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shock tragedy that 4 people died when the cylinder exploded


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->