வாரணாசி தொகுதியில் ஷியாம் ரங்கீலா வேட்புமனு உட்பட 36 வேட்புமனு தள்ளுபடி!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அந்தவகையில் 4கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ளது. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி நாடாளுமன்ற தொகுதிக்கு 7கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கலை பிரதமர் மோடி கடந்த மே14 தேதி தாக்கல் செய்தார். வாரணாசி தொகுதியில் மொத்தம் 55 வேட்புமனுகள் தாக்கல் செய்யபட்டது.

இந்தநிலையில்,தேர்தல் கமிஷன் இணையதளத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய் உள்ளிட்ட 15 பேர் மனு ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு எதிராக வேட்பு மனு தாக்கல் செய்த காமெடி நடிகர் ஷீயாம் ரங்கிலா மனு உட்பட 36 பேர் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஷீயாம் ரங்கீலா பேசுகையில், அனைத்து ஆவணங்களும் சரியான முறையில் அளித்தும் நிராகரிப்புக்கான உரிய காரணம் இல்லை. தேர்தல் கமிஷனில் அரசியல் விளையாட்டு நடந்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shyam Rangeela 36 nomination in Varanasi Constituency Dismissed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->