பிரதமருக்கு சித்தராமையா திடீர் கடிதம்! பின்னணியில் அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


முன்னாள் பிரதமர் தேவகவுடாவில் பேரனும் கர்நாடகாவில் ஹசன் தொகுதி எம்.பியுமான பிரஜ்வல் ரேவண்ணா சர்ச்சை வீடியோ வழக்கில் சிக்கியுள்ளார். இந்த வழக்கை சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்தி வருகிறது. 

மத்திய அரசின் உதவியுடன் பிரஜ்வால் ஜெர்மன் சென்றுள்ளார் என காங்கிரஸ் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது. இந்நிலையில் கர்நாடகா முதல் மந்திரி சித்தராமையா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

அதில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும் எம்.பியுமான ரேவண்ணா சம்பந்தப்பட்ட வழக்கு குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். 

நாட்டை உலுக்கிய பயங்கரமான மற்றும் வெட்கக்கேடான வழக்கை அவர் எதிர்கொண்டுள்ளார். இந்த வழக்கை விசாரிக்க சிஐடியின் கீழ் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் ரேவண்ணா மீது கடந்த 28ஆம் தேதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

மத்திய வெளி உறவு துறை மற்றும் சர்வதேச போலீசார் உதவியுடன் ஜெர்மனியில் இருந்து ரேவண்ணாவை அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கின் அனைத்து ஆவணங்களையும் வழங்க சிறப்பு விசாரணை குழு தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Siddaramaiah letter to Prime Minister 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->