மேகதாது அணைக்கு ஒப்புதல் பெற துரித நடவடிக்கை.!! கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக அம்மாநில முதல்வர் சித்தராமையா இன்று சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்தார். 2023-2024 நிதியாண்டிற்கான காங்கிரஸ் ஆட்சியின் முதல் பட்ஜெட்டை சித்தராமையா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இது சித்தராமையா பங்கேற்கும் 14வது பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகும். 

அப்போது மேகதாது விவகாரம் தொடர்பாக பேசிய முதல்வர் சித்தராமையா "மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த கர்நாடகா அரசு தீவிரம் காட்டும். ஏற்கனவே திட்ட வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஒப்புதல் கிடைத்தவுடன் மேகதாது அணை பணி உடனடியாக தொடங்கப்படும்.

அணை கட்டுவதற்கான நிலம் கையகப்படுத்துவது கர்நாடகா அரசின் முதல் பணியாகும். மேகதாது அணைக்கு நிலம் கொடுக்கும் மக்களுக்கு உரிய நிவாரணத் தொகை அல்லது மாற்று இடத்தில் நிலம் வழங்கப்படும்" என கர்நாடகா பட்ஜெட் தாக்கல் செய்த போது முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். தமிழக அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி கர்நாடக முதல்வர் அறிவித்திருப்பது தமிழக விவசாயிகளை கொந்தளிக்க செய்துள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Siddaramaiah said urgent steps will be taken to build Meghadatu Dam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->