ஹத்ராஸ் விவகாரம் - தாசில்தார் மற்றும் போலீஸ் உள்பட 6 பேர் பணியிடை நீக்கம் - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டம் புல்ராய் கிராமத்தில் கடந்த இரண்டாம் தேதி சாமியார் போலே பாபா பங்கேற்ற ஆன்மிக சொற்பொழிவு சொற்பொழிவு நிகழ்ச்சி முடிந்து பொதுமக்கள் வெளியேறியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியானார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டும், பொதுமக்கள் மற்றும் நேரில் பார்த்த சாட்சிகளிடம் விசாரணை நடத்தியும், புகைப்படங்கள், வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தும் அறிக்கையை தயாரித்துள்ளனர். 

தற்போது இந்த அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகமே இந்த பயங்கர சம்பவத்துக்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. 

சிறப்பு புலனாய்வுக்குழுவினரின் அறிக்கையின் அடிப்படையில் ஆறு அதிகாரிகளை மாநில அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. அதிலும் குறிப்பாக துணை மண்டல அதிகாரி, தாசில்தார் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் என்று ஆறு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

six officers suspend for hadras croud died issue


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->