திருநெல்வேலி || மதுபானக் கடை ஊழியர்களுக்கு அரிவாள் வெட்டு - போலீசார் தீவிர விசாரணை.!
six peoples attack tasmac employees in tirunelveli
நெல்லையில் மதுபானக் கடை ஊழியர்களை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தேவர் குளம் அருகே மதுபானக் கடையில் மது வாங்குவதில் திடீரென தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த 6 பேர் கொண்ட கும்பல் மதுபானக் கடை ஊழியர்களை அரிவாளால் வெட்டியுள்ளனர்
இந்தச் சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அந்தத் தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த மதுபானக் கடை ஊழியர்களை மீட்டு சிகிச்சைக்காக வண்ணாரப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
six peoples attack tasmac employees in tirunelveli