மக்களின் கோரிக்கையை ஏற்று அரிட்டாபட்டி செல்லும் தமிழக முதல்வர்.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் அருகே அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி, அ.வல்லாளபட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் விட்டு இருந்தது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, அங்கிருந்து மக்கள் வெளியேறும் நிலை ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.

இதையடுத்து டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக்கோரி அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்த அரிட்டாபட்டி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி, சட்டசபையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்து ஒருமனதாக நிறைவேற்றினார். 

இதனை தொடர்ந்து, டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் அரிட்டாபட்டி பகுதியில் உள்ள அனைத்து கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்ததுடன் பட்டாசு வெடித்தும், ஆட்டம் பாட்டத்துடனும் கொண்டாடினர்.

இதையடுத்து டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக்கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கிராம மக்கள் பிரதிநிதிகள் 18 பேர், அமைச்சர் மூர்த்தியுடன் நேற்று சென்னைக்கு சென்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்து, அரிட்டாபட்டி மற்றும் அ.வல்லாளபட்டிக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

இதனை ஏற்று கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம், மதுரைக்கு வருகிறார். மதுரை மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் தொண்டர்கள் திரண்டு வந்து முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். தொடர்ந்து. பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில், அரிட்டாபட்டிக்கு சென்று மக்களை சந்தித்து பேச உள்ளார். தொடர்ந்து அ.வல்லாளபட்டியில் நடக்கும் நன்றி தெரிவிப்பு விழாவிலும் பேச உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chief minister mk stalin going to arittapatti


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->