76-வது குடியரசு தினம்: தேசியக்கொடி ஏற்றி வைத்தார் கவர்னர் ஆர்.என்.ரவி! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து வைத்தார். 

நாட்டின் 76-வது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். மேலும் அந்தந்த மாநிலங்களில் கவர்னர்கள் தேசிய கொடியை ஏற்ற உள்ளனர்.

அதன் ஒருபகுதியாக தமிழக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து வைத்தார். அந்த நேரத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு  இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. இதனை தொடர்ந்து கவர்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், முப்படையை சேர்ந்த அதிகாரிகள், அரசு மற்றும் போலீஸ்துறை உயர் அதிகாரிகள் மற்றும் மக்கள் என பலரும் தேசியக்கொடிக்கு 'சல்யூட்' செய்தபடி நின்றனர்.

அதனை தொடர்ந்து வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும்  போலீஸ் அதிகாரிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. அதனை தொடர்ந்து அரசு அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது.  குடியரசு தினவிழா நடைபெற்ற மெரினா பகுதி போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் மெரினா கடற்கரையில் 'டிரோன்கள்' பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின விழாவையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

76th Republic Day: Governor RN Ravi unfurls national flag


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->