உத்தரகாண்டில் பயங்கரம் - புனித யாத்திரை சென்ற ஆறு பேர் பலி.! - Seithipunal
Seithipunal


உத்தரகாண்ட் மாநிலம் ஆதி கைலாஷ் கோயிலுக்கு புனித யாத்திரை செல்வதற்காக கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த இருவர், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இருவர், உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த இருவர் என்று மொத்தம் 6 பேர் காரில் பயணம் செய்தனர். 

அதன் படி அனைவரும் கோயிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு பித்தோராகர் மாவட்டம் வழியாக திரும்பி வந்துக் கொண்டிருந்தனர். இதையடுத்து இவர்கள் தார்ச்சுலா-லிபுலேக் சாலையில் சென்று கொண்டிருந்த போது கார் திடீரென காளி ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. 

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஆறு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த மீட்புப் படையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், இருள் மற்றும் பாதகமான சூழ்நிலை இல்லாத காரணத்தால் உடல்களை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டு தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, உத்தரகாண்ட் மாநிலத்தின் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். புனித யாத்திரை சென்று வீடு திரும்பிய போது விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

six peoples died accident in uttarkhant


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->