ஒரே யானை.. ஜார்கண்ட் மாநிலத்தையே ஆட்டம் காண வைத்த சம்பவம் - 16 பேர் பலி.!
sixteen peoples died for elephant attack in jarkhand
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி மாவட்டம் உள்பட நான்கு மாவட்ட பகுதிகளில் பல நாட்களாக காட்டு யானை ஒன்று அட்டகாசம் செய்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.
அதிலும் குறிப்பாக, கடந்த பன்னிரண்டு நாட்களில் ஹசாரிபாக், ராம்கர், சத்ரா, லோகர்தகா மற்றும் ராஞ்சி மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் யானைத் தாக்கி பதினாறு பேர் பலியாகி உள்ளனர். இது தொடர்பாக ராஞ்சி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:-
"ராஞ்சி மண்டல வனப்பகுதியில் இந்தக் காட்டு யானை தாக்கி ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், நேற்று முன்தினம் யானையை கிராம மக்கள் சிலர் சூழ்ந்து வேடிக்கை பார்த்துள்ளனர். அப்போது அவர்களை யானை துரத்தி தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதனால், பொதுமக்கள் யாரும் யானைகளை யாரும் நெருங்க வேண்டாம். காலை மற்றும் மாலை வேளையில் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.இதேபோன்று பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற தாக்குதலில் ஈடுபட்டது ஒரே யானை தான் என்று தெரிகிறது.
இருப்பினும், அதை உறுதிப்படுத்துவதற்கு ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம். மேலும், இந்த யானையை கட்டுப்படுத்துவதற்கு மேற்கு வங்காளத்தில் இருந்து நிபுணர் குழு ஒன்று அழைக்கப்பட்டுள்ளது" என்றுத் தெரிவித்துள்ளனர்.
English Summary
sixteen peoples died for elephant attack in jarkhand