பீகாரில் அடுத்தடுத்து இடியும் பாலங்கள் - அதிர்ச்சியில் பொதுமக்கள்.!
sixth bridge collapse in bihar
பீகாரில் கடந்த இரண்டு வாரங்களில் அடுத்தடுத்து 5 பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்துள்ளது. பீகாரில் கடந்த 10 நாட்களில் இடிந்த 6 வது பாலம் இதுவாகும்.
விடாது பெய்த கனமழையால் பீகார் மாநிலத்தில் உள்ள கிசான்கஞ்ச் மாவட்டம் தாக்கூர்கஞ்ச் நகரின் பண்ட் ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்ததால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தில் திடீரென கீறல்கள் விழுந்து ஒரு பகுதி கீழ் இறங்கியது.
இதனால், ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பீகாரில் மதுபானி பகுதியில் கட்டப்பட்டுவந்த 75 மீட்டர் நீளமுடைய பாலம் இடிந்து விழுந்துள்ளது. இதேபோல், கடந்த வாரம் கிஷன்கஞ்ச் நகரில் 2011 ஆம் ஆண்டு ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்ட 70 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்ட பாலம், தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இடிந்து விழுந்தது.
இதற்கு முன்னதாக ஆராரியாவில் உள்ள பக்ரா ஆற்றின் மீது புதிதாக கட்டப்பட்ட பாலம், திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தொடர் சம்பவம் மாநில அரசின் மெத்தனபோக்கை காட்டுகிறது.
English Summary
sixth bridge collapse in bihar