கோடை வெப்பம் : உங்கள் வீடுகளில் பாம்பு குடியேறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? வாவா சுரேஷ் கொடுக்கும் ஐடியா இதோ.!
snake issue summer
நாடு முழுவதும் கோடை கால வெப்பம் வாட்ட தொடங்கி விட்டது. கோடை வெப்பத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் போது காடுகளில் வாழும் விலங்குகள் தண்ணீர் தேடி கிராமங்களுக்கு வருவது போன்று, பூமியில் கரையான் புற்றுகளில் (பொந்துகள்) வசிக்கும் பாம்புகளும், புற்றை விட்டு வெளியே வருவது வழக்கம்.
கிராமப்புறங்கள் மற்றும் வயல்வெளிகள் உள்பட நகர்புறங்களிலும் கூட பாம்புகள் புற்றை விட்டு வெளியே வந்து சுற்ற தொடங்கும்.
இதனால் பொதுமக்களும் அதனை கண்டு பயந்து ஓடுவார்கள். மேலும் அதிக பட்சம் கோடை காலத்தில் தான் இந்த சம்பவங்கள் நடக்கின்றன.
கோடை காலத்தில் பாம்புகளின் தொல்லையில் இருந்து தப்பிப்பதற்கு கேரளாவை சேர்ந்த வாவா சுரேஷ் பாம்பு பிடிப்பதில் வல்லவராவார். இவர் பொதுமக்களுக்கு சில வழிமுறைகளை தெரிவித்தார். அதன்படி,
1. கோடைக்காலங்களில் புதிர்கள் உள்ள பகுதியில் தீ வைக்க வேண்டாம் இதனால் பாம்புகள் வெளியே வரக்கூடும்.
2. வீட்டினை சுற்றி விறகுகளை அடுக்கி வைக்க வேண்டாம் இவற்றில் பாம்பு புகுந்துகொண்டு வீட்டிற்குள் வர வாய்ப்பு உள்ளது.
3. வீட்டிற்கு வெளியே ஜன்னல் ஓரம் தேங்காய் மட்டைகள், செங்கற்கள், ஓடுகள், குச்சிகள் போன்றவற்றை குவித்து வைக்க வேண்டாம்.
4. காலணிகளை திறந்தவெளியில் விட்டு செல்ல வேண்டாம். அதற்குள் பாம்புகள் புகுந்து மறைந்து இருக்க வாய்ப்பு உள்ளது
5. வீடுகளில் உள்ள கதவுகளைத் திறந்து வைத்திருக்க கூடாது அதன் வழியாக பாம்புகள் வீட்டிற்குள் வர வாய்ப்பு அதிகமாக உள்ளது.
6. வீடுகளை சுற்றி படர்தாமரை போன்ற செடி மற்றும் படர் கொடிகளை வளர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
7. வீடுகளைச் சுற்றி பள்ளங்கள் மற்றும் குழிகள் இருந்தால் அதனை உடனடியாக மூடி விடுவது நல்லது.
8. வீட்டு வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மேலும் வீட்டை சுற்றி வாரத்திற்கு ஒரு முறை டீசல் தெளித்து வந்தால் அதன் வாடையில் பாம்புகள் வராது.
9. வீட்டின் அருகே கழிவு நீர்களை தேங்குவதற்கு விடக் கூடாது.
10. கழிவுகளை வயல்வெளியில் கொட்டுவதை தவிர்க்கவும். அவ்வாறு கொட்டினால் அங்கு எலிகள் வர வாய்ப்பு அதிகம். அந்த எலிகளை பிடிக்க பாம்புகள் வரும்.
இந்த வழிமுறைகளை பின்பற்றினால் கோடைகாலங்களில் பாம்புகள் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம் என்று வாவா சுரேஷ் தெரிவித்துள்ளார்.