நைஜரில் பயங்கரவாத தாக்குதல்; தொழுகையில் ஈடுபட்டிருந்த 44 பேர் உயிரிழப்பு..!
Terrorist attack in Niger 44 people praying in a mosque killed
மேற்கு ஆப்பிரிக்கா நாடான நைஜரில் மசூதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நைஜரில், புர்கினா பாசோ மற்றும் மாலி ஆகிய நாடுகளின் எல்லையை ஒட்டி கொகரவ் நகரம் உள்ளது. இந்த நகரத்திற்கு உட்பட்ட பம்பிடா என்ற கிராமத்தில் முஸ்லிம்கள் பலர் நேற்று மதியம் மசூதியில் தொழுகை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் மசூதியை சுற்றிவளைத்து தாக்குதலில் ஈடுப்பட்டனர். இதில் 44 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 13 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் அருகிலுள்ள சந்தை மற்றும் வீடுகளுக்கு தீ வைத்துள்ளனர். ஆனால், இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பே காரணம் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த துயர சம்பவத்தையடுத்து நைஜரில் 03 நாட்கள் தேசிய துக்க தினம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நைஜர், மாலி மற்றும் புர்கினா பசோ ஆகிய 03 நாடுகளும் கடந்த 10 வருடத்திற்கும் மேலாக அல்கொய்தா உள்ளிட்ட ஜிகாதி கிளர்ச்சிக் குழுக்களால் நடத்தப்படும் கிளர்ச்சியை ஒடுக்க போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Terrorist attack in Niger 44 people praying in a mosque killed