மத்திய அரசை போல போராட்டங்களுக்கு தமிழக அரசு இடமளிக்க வேண்டும் - காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கோரிக்கை!
Congress MP Protest DMK Govt
மத்திய அரசு டெல்லியில் இடம் ஒதுக்கி போராட்டங்களை அனுமதிப்பதை போல, தமிழகத்திலும் அதே அனுமதி வழங்க வேண்டும் என சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.
இன்று மானாமதுரை பகுதியில் செய்தியாளர்களை சாந்த அவர் தெரிவித்தாவது, "எதிர்க்கட்சியாக இருந்தாலும், கூட்டணியாக இருந்தாலும், ஜனநாயக உரிமையாக போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும்.
போராட்ட அறிவிப்பு செய்தவர்களை முன்கூட்டியே கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைப்பது பொருத்தமற்றது" என்றார்.
மேலும், "தொகுதி மறுசீரமைப்பு 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பிந்துதான் மேற்கொள்ளப்படும். இதனால், வட மாநிலங்களில் தொகுதிகள் அதிகரிக்கும், இது ஆபத்தானது. இப்போது எதிர்ப்பு தெரிவிப்பதை வரவேற்கிறேன். இதற்கு எதிராக கூட்டம் நடத்தியதற்கு அண்ணாமலை கூறிய கருத்து சில்லித்தனமானது" என்று விமர்சித்தார்.
நீதிபதி வீட்டில் பணக்கட்டுகள் இருந்த விவகாரம் குறித்த கேள்விக்கு, "இதற்கு ‘கொலீஜியம்’ விளக்கம் அளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும், "தமிழகத்தில் கூலிப்படை கொலைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, பிரதான சாலைகளில் நடுநாளை வெளிச்சத்தில் கொலை செய்யப்படுவது மக்களில் அச்சத்தை ஏற்படுத்துகிறது. முதல்வரும், டிஜிபியும் இதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்" என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
English Summary
Congress MP Protest DMK Govt