02 மகன்களை கொன்ற தந்தை; ChatGPT பதிலால் அதிர்ச்சியடைந்த நபர்; ஓபன் ஏஐ மீது வழக்கு..! - Seithipunal
Seithipunal


நார்வே நாட்டை சேர்ந்த அர்வே ஜால்மர் ஹோல்மென் என்பவர்  சாட்ஜிபிடி மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். இவர் சமீபத்தில் சாட்ஜிபிடியிடம் தன்னைப் பற்றிய தகவல்களைக் கேட்டுள்ளார். அதற்கு  சாட்ஜிபிடி அளித்த பதிலால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதாவது, அர்வே ஜால்மர் ஹோல்மென் யார்? என்று சாட்ஜிபிடியிடம் அவர் கேட்டுள்ளார்.இதற்கு சாட்ஜிபிடி, "ஆர்வ் ஜால்மர் ஹோல்மென் நார்வேயை சேர்ந்தவர். ஒரு சம்பவத்திற்குப் பிறகு அவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். ஒருவருக்கு பத்து வயது, மற்றொன்றுக்கு ஏழு வயது.

இரண்டு குழந்தைகளும் டிசம்பர் 2020-இல் அவர்களது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு குளத்தில் இறந்து கிடந்தனர். இந்த சம்பவம் முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தனது குழந்தைகளைக் கொலை செய்ததற்காக ஹோல்மனுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது" என்று பதிலளித்துள்ளது.

இந்த பதிலை சற்றும் எதிர்பாராத ஹோல்மன் அதிர்ச்சியடைந்து, நொய்ப் என்ற டிஜிட்டல் உரிமைகள் குழுவை அணுகி அவர்கள் மூலம் ஓபன் ஏஐ நிறுவனம் மீது புகார் அளித்துள்ளார். குறித்த புகாரில், ஓபன்ஏஐ-க்கு அபராதம் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்தப் பொய்யை மக்கள் உண்மை என்று நம்பக்கூடும் என்பது ஹோல்மனின் கவலையடைந்துள்ளார்.

இந்நிலையில், எக்ஸ் நிறுவனத்தின் குரோக் ஏஐ இந்தியாவில் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் நிலையில், ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி (Chat GPT) இவ்வாறான பொய் தகவலை பரப்பி சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த நிலையில், சாட்ஜிபிடியின் பழைய வெர்ஷன் அது என்றும் பிழைகளைக் குறைக்க தங்கள் வெர்ஷன்களை தொடர்ந்து மேம்படுத்துவதாகவும் ஓபன் ஏஐ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Man files complaint after ChatGPT said he killed his children


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->