தந்தை கொலை செய்து விட்டு நாடகமாடிய மகன்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!
Son arrested for killing father
குடும்ப பிரச்சனை காரணமாக தந்தையை கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.
மகாராஷ்டிர மாநிலம், கல்யாண் பகுதியை சேர்ந்தவர் பிரமோத் பனேரியா இவர் தனது மனைவி மற்றும் லோகேஷூடன் வசித்து வருகிறார். லோகேஷ் தனது குடும்பத்தினருடன் தகராற்றில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அவர்களுக்குள் தகராறு ஏற்படுள்ளது. இதனால், லோகேஷ் தனது தாய் மற்றும் தந்தையை சரமாறியாக குத்தியுள்ளார். இதனை அடுத்து, அவர்களை மீட்ட அக்கம்பக்கதினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில், பிரமோத் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். லோகேஷ் தனது தந்தையை அவரையும் அவரது தாயையும் கொலை செய்ய முயன்றதாக தெரிவித்தார்.
ஆனால், அவரின் பதிலில் காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. லோகேஷை தொடர்ந்து கண்காணித்து வந்த காவல்துறையினர் அவர் தாயிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
இதனை அடுத்து, லோகேஷிடம் அவர்கள் பாணியில் விசாரணை நடத்திய போது தந்தையை கொலை செய்ததை ஓப்பு கொண்டுள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தில், தந்தை குடித்து விட்டு தினம் தாக்குவார் எனவும் அவரது தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் அவர்களிடம் இருந்து தப்பிக்க கொலை செய்ததாக தெரிவித்தார்.
இந்த வாக்குமூலத்தை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Son arrested for killing father