மீண்டும் மருமகனின் பதவி பறிப்பு...மாயாவதி அதிரடி!
Son in law rejected... Mayawati in action!
தனது கடைசி மூச்சு இருக்கும்வரை அரசியல் வாரிசை அறிவிக்கப் போவது இல்லை என்றும் கட்சி விவகாரத்தை தானே பார்த்துக் கொள்கிறேன் என மாயாவதி தெரிவித்துள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டு இறுதியில் மாயாவதி தனது அரசியல் வாரிசாக மருமகன் ஆகாஷ் ஆனந்தை அறிவித்தார். அதோடு மட்டுமல்லாமல் ஆகாஷ் ஆனந்திற்கு பகுஜன் சமாஜ்வாதி கட்சியில் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவி என்பதும் வழங்கப்பட்டது.
இதற்கிடையே, கடந்த ஆண்டு மே மாதம் பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் மருமகன் ஆகாஷ் ஆனந்தை கட்சிப்பொறுப்பில் இருந்து நீக்கினார் மாயாவதி. ஆனால் இதையடுத்து சில வாரங்களில் மீண்டும் ஆகாஷ் ஆனந்திற்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், இரண்டாவது முறையாக ஆகாஷ் ஆனந்தை கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து மாயாவதி அதிரடியாக நீக்கி உள்ளார்.

அவருக்கு பதில் அவரது தந்தை ஆனந்த் குமார் மற்றும் கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ராம்ஜி கவுதம் ஆகியோரை அந்தப் பொறுப்பில் நியமித்துள்ளார் மாயாவதி.
மேலும் தனது கடைசி மூச்சு இருக்கும்வரை அரசியல் வாரிசை அறிவிக்கப் போவது இல்லை என்றும் கட்சி விவகாரத்தை தானே பார்த்துக் கொள்கிறேன் என மாயாவதி தெரிவித்துள்ளார்.மாயாவதியின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
English Summary
Son in law rejected... Mayawati in action!