எனது அரசியல் வாழ்க்கை முடிந்தது.. சோனியா காந்தி அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி பங்கேற்றார். அந்த மாநாட்டு மேடையில் பேசிய அவர் "தற்பொழுது நாட்டிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் மிகவும் சவாலான நேரம். 

இந்தியாவில் உள்ள அனைத்து அமைப்புகளையும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. ஒரு சில தொழிலதிபர்களுக்காக நாட்டின் பொருளாதாரத்தை மத்திய அரசு சீர்குலைத்துள்ளது.

கடந்த 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான திறமையான அரசு பெற்ற வெற்றி எனக்கு தனிப்பட்ட முறையில் திருப்தி அளிக்கிறது. ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையுடன் எனது அரசியல் வாழ்க்கை முடிகிறது என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த யாத்திரை காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மக்கள் நல்லிணக்கம் சகிப்புத்தன்மை மற்றும் சமத்துவத்தை விரும்புகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது" என விழா மேடையில் சோனியா காந்தி பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sonia Gandhi announced political career is over


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->