சோனியா, ராகுல் பயணம் செய்த விமானம் அவசர அவசரமாக தரையிறக்கம்!  - Seithipunal
Seithipunal


வரும் 2024 மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை எப்படியாவது தோல்வியடைய செய்யவேண்டும் என்ற ஒரே இலக்கோடு, நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகள் இன்று இரண்டாவது ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளன.

பெங்களூருவில் நடந்த இந்த கூட்டத்தில், நிதிஷ் குமார், மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, கேஜ்ரிவால் உட்பட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், காங்கிரஸ் தரப்பில் கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டவர்களின் கலந்து கொண்டனர்.

பாஜகவுக்கு எதிரான வியூகம் அமைக்கவும், வலுவான ஒரு எதிர்கட்சி கூட்டணியை அமைக்கவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், 26 எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டணிக்கு ‘I N D I A’ (இந்தியா) என்ற பெயர் சூட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெங்களூரு கூட்டம் முடிந்து டெல்லிக்கு திரும்பிய சோனியா காந்தி, ராகுல்காந்தி பயணித்த  விமானம் அவசர அவசரமாக தரையிறக்கபட்டுள்ளது.

முதல்கட்ட தகவலின்படி, தொழில்நுட்ப கோளாறு காரணமாக போபாலில் இந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SoniaGandhi flight Urgent landing


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->