10 மாதங்களில் இரண்டரை கோடி பேர் பயன் - தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


ஆன்லைன் முறையில் முன்பதிபு இல்லாத ரயில் பயணச்சீட்டுக்களை பெறும் வசதி மூலம், கடந்த 10 மாதங்களில் இரண்டரை கோடி பேர் பயனடைந்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட்டுக்களை UTS செயலி (UTS App) மூலம் ஆன்லைனில் பெறும் வசதியை ரயில்வே அறிமுகப்படுத்தியது. 

இந்த ஆப் மூலம் சீசன் டிக்கெட்டுகள், பிளாட்பாரம் டிக்கெட்டுகள் ஆகியவற்றையும் பெற முடியும். 

ரயில் நிலையத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருந்தபடி, பயணச்சீட்டை பதிவு செய்து கொள்ளலாம்.

காகிதம் இல்லா பயணச் சீட்டு படி, யூடிஎஸ் செயலியில் SHOW TICKET option மூலம் டிக்கெட் பரிசோதகரிடம் காண்பிக்கலாம். 

மேலும் ஒரு வாய்ப்பாக, ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு அலுவலகம் அருகே ஒட்டப்பட்டுள்ள கியூஆர் கோடு (QR code) மூலமும் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டை பெற முடியும்.

இப்படியாக கடந்த ஏப்ரல் 2022 முதல் ஜனவரி 2023 வரை இந்த ஆப் மற்றும் மொபைல் போன் மூலம் 50.75 லட்சம் பயணச் சீட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 2.51 கோடி பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி பயணச் சீட்டுகளை பதிவு செய்து உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Southen Railway UTC App


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->