ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்திற்கு ஆப்பு.! வெளியான பரபரப்பு அறிக்கை.! - Seithipunal
Seithipunal


அடுத்த எட்டு வாரங்களுக்கு ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம், 50 சதவீத விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும் என்று, விமான போக்குவரத்து இயக்குனராகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்களில் அண்மைக்காலமாக கோளாறுகள் ஏற்படுவதாக புகார் எழுந்த காரணத்தினால், தற்போது இந்த கட்டுப்பாட்டை விமான போக்குவரத்து இயக்குனர் இயக்குனரகம் விதித்துள்ளது.

கடந்த 18 நாட்களில் மட்டும், எட்டு முறை விமானத்தில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக, ஸ்பைஸ் ஜெட் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விமான போக்குவரத்து இயக்குனரகத்திற்கு புகார் வரவே, அந்நிறுவனத்திற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, "ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சொல்லிய காரணங்களுக்கான அடிப்படையில், பாதுகாப்பான பயணத்திற்காக பரிசோதனை செய்து ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. 

* இதன் காரணமாக அடுத்த 8 வாரங்களுக்கு 50 சதவிகித விமானங்களை மட்டுமே இயக்க அறிவுறுத்தப்படுகிறது. 

* விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், பாதுகாப்பு வழங்குவதற்கும், போதுமான தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார அம்சங்கள் உள்ளதை விமான போக்குவரத்து இயக்குநரகத்திற்கு உறுதி செய்ய வேண்டும்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SpiceJet Issue July


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->