காரைக்கால் மீனவர்கள் 15 பேர் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்! - Seithipunal
Seithipunal


காரைக்கால் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர், இரும்பு குழாயால் தாக்கிவிட்டு அவர்கள் வைத்திருந்த உணவுப் பொருட்களையும், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட சாதனங்களையும் பறித்து சென்றுள்ளனர்.

 

காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு மற்றும் வானகிரி பகுதியை சேர்ந்தவர்கள் 15 பேர் கடந்த 2-ஆம் தேதி இரவு காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு புறப்பட்டனர்.

இந்த நிலையில், இவர்கள் நேற்று கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய கடற்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இவர்களை இரும்பு குழாய்களால் தாக்கியுள்ளனர்.

மேலும், அவர்கள் படகில் வைத்திருந்த உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றுள்ளனர். இதில் ராஜ்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், மற்றவர்களுக்கு லேசான  காயம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, அப்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தவர்களின் உதவியால் இவர்கள் நேற்று பிற்பகல் காரைக்கால் மீன்பிடித்துறைமுகத்துக்கு வந்தடைந்தனர்.

மேலும், காயமடைந்தவர்கள் காரைக்காலில் தனியார் மருத்துவமனையிலும், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ராஜ்குமார் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இது குறித்து அவர்கள் தெரிவித்ததாவது,

"நாங்கள் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், படகில் ஏறி, எங்களை இரும்பு குழாயால் தாக்கிவிட்டு, உணவுப் பொருள்கள், மோதிரம், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட சாதனங்களை பறித்துச் சென்றனர்". என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sri Lanka Navy attack 15 Karaikal fishermen


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->