ஹிஜாப் விவகாரத்தில் பிரபஞ்ச அழகி ஹர்னாஸ் சாந்து அதிரடி பேட்டி.! - Seithipunal
Seithipunal


ஹிஜாப் சர்ச்சை விவகாரம் குறித்து, பெண்கள் மீதான விமர்சனத்தை நிறுத்துங்கள்- உலக அழகி ஹர்னாஸ் சாந்து.

இஸ்ரேலில் நடந்த ‘மிஸ் யுனிவர்ஸ் 2021’ போட்டியில் இந்திய அழகி ஹர்னாஸ் சாந்து பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 21 ஆண்டுகள் கழித்து பஞ்சாபை சேர்ந்த ஹர்னாஸ் சாந்து உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டர்.

கடந்த 17-ந் தேதி அன்று இந்தியாவிற்கு திரும்பி இருந்த அவரை கவுரவிக்கும் வகையில்  விழா ஒன்று நடந்தது. எந்த நிகழ்ச்சியில் ஹர்னாஸ் சாந்துவிடம் செய்தியாளர் ஒருவர் ஹிஜாப் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பினார்.

அப்போது, அரசியல் கேள்விகள் எதுவும் கேட்க வேண்டாம் என்று நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள்  கேட்டுக் கொண்டனர். 

ஆனால், ஹர்னாஸ் சாந்து ஹிஜாப் விவகாரம் குறித்து தனது கருத்தினை தெரிவித்தார். அதில், "எப்போதும் நீங்கள் ஏன் பெண்களையே குறி வைக்கிறீர்கள்? இப்போது கூட நீங்கள் என்னை தான் குறி வைத்துள்ளீர்கள். 

ஹிஜாப் விவகாரத்தில் கூட பெண்கள் குறி வைக்கப்படுகிறார்கள். பெண்கள் அவர்கள் விரும்பும் வழியில் வாழட்டும். பெண்களை சிறகை விரித்து பறக்க விடுங்கள். மாறாக இறக்கைகளை வெட்ட வேண்டாம். வேண்டும் என்றால் உங்கள் இறக்கைகளை வெட்டி கொள்ளுங்கள்."  என்று  ஹர்னாஸ் சாந்து தெரிவித்தார்.

Stop Criticism on Women says World Beauty
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stop Criticism on Women says World Beauty March


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->