வயநாடு சோகம் : சிறுமி எழுதிய சிறுகதை நிஜமானது - வெளியான நெகிழ்ச்சித் தகவல்..!! - Seithipunal
Seithipunal



கேரள மாநில வயநாடு மாவட்டத்தில் கடந்த வாரம் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் மண்ணில் சிக்கி 340க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த துயர சம்பவம் குறித்து வயநாடு பள்ளிச் சிறுமி ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு எழுதிய சிறுகதை குறித்து தற்போது வெளியாகி உள்ளது. 

வயநாடு மாவட்டத்தின் சூரல்மலை பகுதியில் வெரல்மலா என்ற இடத்தில் ஒரு அரசினர் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும் லயா என்ற மாணவி கடந்த 2023ம் ஆண்டு பள்ளியின் மாத இதழுக்காக ஒரு சிறுகதை ஒன்றை எழுதியுள்ளார். 

அந்த சிறுகதையில் நீர்வீழ்ச்சியில் மூழ்கிய சிறுமி ஒரு பறவையாக மாறி திரும்பி வந்து, தனது கிராமத்தினரிடம் நீர் நிலைகளுக்கு அருகில் செல்லக் கூடாது என்றும், அதனால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்தும் எச்சரிக்கை விடுப்பதாக அந்த சிறுகதையில் எழுதியுள்ளார். 

அந்த சிறுகதையில் பறவையாக மாறிய சிறுமி, அனைவரையும் அங்கிருந்து தப்பிச் செல்லுமாறு எச்சரிக்கிறார். உடனடியாக அனைவரும் தப்பிச் சென்று தூரத்தில் இருந்து திரும்பி பார்க்கும் போது, கிராமத்தில் திடீரென வெள்ளம் வருகிறது. 

இதையடுத்து அந்த பறவை மீண்டும் அழகிய சிறு பெண்ணாக மாறுகிறது. நீரில் மூழ்கிய தன்னுடைய கதை போல் வேறு யாருக்கும் நடக்க கூடாது என்பதற்காகவே அந்த பெண் அவர்களை எச்சரிக்க, பறவையாக வந்தார் என்று கதை முடிகிறது. 

இந்த கதை தற்போது நிகழ்ந்துள்ள வயநாடு துயரத்தை ஒத்துள்ளதாக அனைவரும் துயரத்துடன் கூறி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Story Of Wayanad School Girls Became True in Real


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->