வெறித்தனமாக கடித்து குதறிய தெருநாய்கள்... பறிபோன 3 வயது சிறுவனின் உயிர்..! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் லத்தி தாலுகாவில் உள்ள தாம்நகர் கிராமத்தை சேர்ந்தவர் ரோனக் ரத்வா என்ற 3 வயது சிறுவன். விவசாய தொழிலாளியான சிறுவனின் பெற்றோர் மதுபாய் சித்பரா என்பவருக்கு சொந்தமான விவசாய வயலில் வேலைக்கு சென்றுள்ளனர். அப்பொழுது அவர்களுடன் சென்ற சிறுவன் அங்கு விளையாடிக்கொண்டிருந்துள்ளான்.

அப்பொழுது அங்கு வந்த தெரு நாய்கள் கூட்டம் சிறுவனை வெறித்தனமாக கடித்துள்ளது. இதில் சிறுவனின் தலை மற்றும் முதுகில் தெரு நாய்கள் பயங்கரமாக கடித்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர், உடனடியாக சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்து உள்ளான். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stray dogs kill 3 year old boy in Gujarat


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->