குஜராத்தில் பரபரப்பு : வேறொருவருடன் பேசியதற்காக முன்னாள் காதலியை கொலை செய்த மாணவன் கைது.!  - Seithipunal
Seithipunal


குஜராத்தில் பரபரப்பு : வேறொருவருடன் பேசியதற்காக முன்னாள் காதலியை கொலை செய்த மாணவன் கைது.! 

குஜராத் மாநிலத்தில் உள்ள மெஹ்சானா மாவட்டம் வதஸ்மாவில் மருந்தகக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படித்து வந்த மாணவன் ஒருவர் அதே கல்லூரியில் பயின்ற ஒரு மாணவியை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இவர்கள் இருவரும் கடந்த ஓராண்டுக்கு முன்பு கருத்து வேறுபாட்டினால் பிரிந்துள்ளனர்.

அதன் பின்னர் அந்த மாணவி மற்றொரு ஆண் நண்பருடன் பேசி வந்துள்ளார். இதையறிந்த அந்த மாணவன் தனது முன்னாள் காதலியான மாணவியை கடந்த ஏப்ரல் 28ம் தேதி, நோட்புக் கொடுப்பதாக கூறி முன்னாள் காதலியை கல்லூரி வளாகத்தின் ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். 

அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாணவன், மாணவியின் கழுத்தை நெறித்து கொன்று உடலை கல்லூரி வளாகத்திற்குள்ளேயே மறைத்து விட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் கல்லூரி வளாகத்தில் துர்நாற்றம் வீசியதால் கல்லூரி நிர்வாகம் சார்பில் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி அவர்கள் விரைந்து வந்து சோதனை நடத்தியதில் பெண் ஒருவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் போலீசார் கல்லூரியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் மாணவன் கடைசியாக மாணவியுடன் பேசிக்கொண்டிருந்த காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன் படி போலீசார் குற்றவாளியான அந்த மாணவனை பிடித்து விசாரணை செய்ததில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து போலீசார் அந்த மாணவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் காதலியை மாணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

student arrested for kill girl friend in gujarat


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->