சிவில் தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை - கடிதத்தில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
student sucide in maharastra
மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சலி என்ற கல்லூரி மாணவி, தலைநகர் டெல்லியில் உள்ள ராஜேந்திர நகர் பகுதியில் தங்கியிருந்து சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வந்தார். இதுவரைக்கும் மூன்று முறை யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதியும் வெற்றி பெற முடியாததால், அந்த மாணவி மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த மாதம் 21-ந்தேதி அஞ்சலி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்துச் சென்ற போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் மாணவி இருந்த அறையை சோதனை செய்தனர்.
அந்த சோதனையில் மாணவி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு எழுதி வைத்துள்ள கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அந்தக் கடிதத்தில் மாணவி அஞ்சலி, தனது தாய், தந்தையிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், தனக்கு ஏற்பட்டுள்ள தீவிர மனச்சோர்வில் இருந்து தன்னால் விடுபட முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசு தேர்வுகள் மற்றும் அரசு பணிகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏராளமான இளைஞர்கள் இந்த பணிகளை பெறுவதற்காக போராடி வருகிறார்கள். விடுதி உரிமையாளர்கள் வாடகையை உயர்த்தி மாணவர்களை சுரண்டுகின்றனர். அனைத்து மாணவர்களாலும் அவ்வளவு வாடகை தொகையை செலுத்திவிட முடியாது.
தனது உடல் உறுப்புகளை தானம் செய்து விட வேண்டும் என தனது பெற்றோரிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
student sucide in maharastra