#Breaking : திருவனந்தபுரம் || மத பாடசாலையில் மாணவி தற்கொலை - சந்தேக இருப்பதாக பெற்றோர் பரபரப்பு புகார்.!!
student sucide in thiruvananthapuram madarasa
திருவனந்தபுரம் || மத பாடசாலையில் மாணவி தற்கொலை - சந்தேக இருப்பதாக பெற்றோர் பரபரப்பு புகார்.!!
கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் அருகே பீமா பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரகுமத் பீவி மகள் அஸ்மியாமோள். இவர் பாலராமபுரத்தில் உள்ள ஒரு மத பாடசாலையில் தங்கி படித்து வந்துள்ளார். இந்த நிலையில், அஸ்மியாமோள் நேற்று முன்தினம் தனது பெற்றோரை தொடர்பு கொண்டு, தன்னை உடனடியாக வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு பதறிப்போன மாணவியின் பெற்றோர் உடனே பாடசாலைக்கு சென்றனர். ஆனால் அங்கு அவர்களை பாடசாலை நிர்வாகம் மாணவியைச் சந்திக்க அனுமதிக்கவில்லை. இதனால் பெற்றோர் வீட்டிற்குத் திரும்பி சென்று விட்டனர்.
சிறிது நேரம் கழித்து பாடசாலை நிர்வாகத்தினர் மாணவியின் பெற்றோரின் செல்செல்போனுக்கு அழைப்பு விடுத்து உங்களுடைய மகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளனர்.
அதன் பின்னர் சம்பவம் குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி போலீசார் விரைந்து வந்து மதபாடசாலை கழிப்பறையில் தூக்கில் பிணமாக தொங்கிய அஸ்மியாமோள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதற்கிடையே மாணவியின் பெற்றோர் தங்களது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவளது மரணத்திற்கு அவள் படித்து வந்த பாடசாலை நிர்வாகமே காரணம் என்றும் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
student sucide in thiruvananthapuram madarasa