கொளுத்தும் வெயில்.. பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிப்பு - மாநில அரசு உத்தரவு.! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலத்தில் பள்ளிகளுக்கு ஜூன் 26 ஆம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நாளை முதல் பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது நிலவி வரும் வெப்பநிலை காரணமாக பள்ளிகளின் கோடை விடுமுறையை ஜூன் 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதிக வெப்பநிலை மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கோடை விடுமுறையை நீட்டிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் உத்தரவிட்டுள்ளதாகவும், இது குறித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 42 44 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதாக ஐஎம்டி தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Summer holidays extended in satishkar for heatwave


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->