தொடங்கியது சுனிதா வில்லியம்ஸின் விண்வெளிப் பயணம்!
Sunitha Williams Space Travel Journey Started
போயிங் நிறுவனத்தின் ஸ்டர்லைனர் விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் புல்ச் விச்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
நேற்று இரவு புறப்பட்ட விண்கலம் 25 மணிநேர பயணத்திற்குப் பின் வியாழன் அன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அங்கு அவர்கள் இருவரும் சுமார் ஒரு வாரம் வரை சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளனர்.
இதையடுத்து அங்கு ஆய்வுகள் முடிந்த பிறகு புல்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் இருவரும் வரும் ஜூன் 14ம் தேதி பூமிக்கு திரும்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக சுனிதா வில்லியம்ஸ் இரண்டு முறை விண்வெளிப் பயணம் மேற்கொண்டுள்ளார். இது அவரது 3வது விண்வெளிப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஸ்டார்லைனர் விண்கலமும் 2019ம் ஆண்டே விண்வெளி வீரர்கள் இல்லாமல் சோதனை முயற்சியாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இந்த முயற்சி தோல்வி அடைந்ததையடுத்து மீண்டும் பலமுறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதையடுத்து 2022ம் ஆண்டு மீண்டும் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. அப்போது பாராசூட் உள்ளிட்ட சிலவற்றில் பிரச்சினை எழுந்ததால் இரண்டு முயற்சிகள் தோல்வியை தழுவின. இந்நிலையில் தற்போது மூன்றாவது முயற்சியில் வெற்றிகரமாக விண்வெளி நோக்கி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Sunitha Williams Space Travel Journey Started