வெம்பக்கோட்டை அகழாய்வு - பெண்கள் விளையாடிய வட்டசில்லுகள் கண்டெடுப்பு.!
round plates found in vembakottai excavation
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளm பகுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரைக்கும் 18 குழிகள் தோண்டப்பட்டு அதில் ஏராளமான சங்கு வளையல்கள், சுடுமண் முத்திரைகள், மண் குவளைகள், கண்ணாடி மணிகள், சூது பவளம், தீப விளக்குகள், ஆபரணம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் கிடைத்துள்ளன.
அதிலும் குறிப்பாக அதிகளவில் பெண்கள் பொழுது போக்கிற்காக பாண்டி விளையாட்டுக்கு பயன்படுத்திய வட்டச்சில்லுகள் ஏராளமாக கிடைத்துள்ளன. இதன் மூலம் முன்னோர்கள் பொழுது போக்கிற்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது தெரிய வருகிறது.
இதற்கு முன்பு நடத்தப்பட்ட முதல் இரண்டு கட்ட அகழாய்வில் சிறுவர்கள் விளையாட பயன்படுத்திய சில்லுவட்டுகள் மட்டுமே கிடைத்தன. அதுமட்டுமல்லாமல் பொழுதுபோக்கு விளையாட்டுகளுக்கு சுடு மண்ணால் செய்யப்பட்ட ஆட்ட காய்கள், தந்தத்தினால் செய்யப்பட்ட ஆட்டக்காய்களையும் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இதுவரைக்கும் நடத்தப்பட்ட அகழாய்வில் 3,200 பொருட்கள் கிடைத்துள்ளதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.
English Summary
round plates found in vembakottai excavation