தேவைக்கு மட்டும் இயற்கை வளங்களை பயன்படுத்த வேண்டும் - தலைமை நீதிபதி சந்திர சூட்.! - Seithipunal
Seithipunal


கோவா  மாநிலத்தின் ஆளுநர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை 'பாரதத்தின் பாரம்பரிய மரங்கள்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த நிலையில், இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா பனாஜியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. 

இந்த விழாவில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;- "இயற்கை என்பது நிகழ்காலம். ஆகவே, எதிர்கால தேவைகளுக்காக இயற்கை வளங்களை சுரண்டக் கூடாது. 

நமது தேவைக்கு ஏற்ற அளவிற்கு மட்டுமே இயற்கை வளங்களை நாம் பயன்படுத்த வேண்டும். பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை எழுதியுள்ள புத்தகம் மனித வாழ்க்கையில் இயற்கையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. 

இந்த புத்தகத்தில் இருக்கும் பல்வேறு பாரம்பரிய மரங்களை பற்றிய தகவல்கள், மனித கலாசாரத்திற்கும், அன்னை பூமிக்கும் இடையே இருக்கும் உறவை விளக்குகிறது" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

supreme court cheif justice Chandrachud speech book published function


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->