#Breaking: கூட்டு பாலியல் குற்றவாளிகள் 11 பேர் விடுவிக்கப்பட்ட வழக்கு.. உச்சநீதிமன்றம் குஜராத் அரசுக்கு அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவரான சுபாஷினி அலி குஜராத் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குஜராத் அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

குஜராத் மாநிலத்தை சேர்ந்த 20 வயது கர்ப்பிணி பெண்ணான பில்கிஸ் பானு என்பவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை செய்யப்பட்டனர். இது குறித்த வழக்கில் 11 பேர் கைதாகிய நிலையில், மும்பை நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின்படி ஆயுள் தண்டனை பெற்று வந்தனர்.

இத்தகைய சூழலில், 11 ஆண்டுகளுக்குப் பின் கடந்த சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ல் அந்த குற்றவாளிகள் கருணை அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர். இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சுபாஷினி அலி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில், இந்த பொதுநல மனு குறித்து குஜராத் அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இரண்டு வாரங்களுக்குள் குஜராத் அரசு பதிலளிக்க வேண்டுமென்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றவாளிகள் 11 பேரும் எதிர் தரப்பில் இந்த வழக்கில் இணைந்துகொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme court Judgement about Gujarat Bilguis banu rape case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->