தமிழில் 52 வழக்குகளின் தீர்ப்பு... 12 மொழிகளிலும் வெளியாகும்.. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவிப்பு...!! - Seithipunal
Seithipunal


மும்பையில் நடைபெற்ற பார் கவுன்சில்  நிகழ்ச்சி பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திர சூட் பேசுகையில் ஆங்கிலத்தில் உள்ள சட்டங்களை நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பொதுமக்கள் தாங்கள் பேசும் மொழியில் புரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை இந்தியாவின் பிராந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பதற்காக நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சூரத் கோவிந்தராஜ், டெல்லி ஐஐடியை சேர்ந்த மாதேஷ் குப்தா, எக்ஸ்பிரஸ் பவுண்டேஷன் சேர்ந்த விவேக் ராகவன் உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை முடிந்த வழக்குகளின் தீர்ப்பை சம்பந்தப்பட்ட மாநில மொழிகளில் மொழிபெயர்த்துள்ளனர்" என பேசியுள்ளார்.

 

குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை வெளியாகும் பல்வேறு வழக்குகளின் தீர்ப்புகள் 13 மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. குறிப்பாக ஒடியா மொழியில் 21 வழக்குகளும், மராத்தி மொழியில் 14 வழக்குகளும், அசாமி மொழியில் 4 வழக்குகளும், தாரோ மொழியில் 1 வழக்கும், கன்னட மொழியில் 17 வழக்குகளும், காசி மொழியில் 1 வழக்கும், மலையாளம் மொழியில் 29 வழக்கும், நேபாள மொழியில் 3 வழக்கும், பஞ்சாபி மொழியில் 4 வழக்கும், தெலுங்கு மொழியில் 28 வழக்கும், உருது மொழியில் 3 வழக்குகளும், அதிகபட்சமாக தமிழ் மொழியில் 52 வழக்குகளுக்கும் நாளை தீர்ப்பு வெளியிடப்பட உள்ளது. உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக பிராந்திய மொழிகளில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது இந்திய மக்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme Court judgments will be published in 12 languages


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->