தேடப்பட்டு வந்த சர்வதேச போதை பொருள் கடத்தல் தலைவன் மெக்சிகோவில் சுட்டுக்கொலை..!
The wanted international drug kingpin has been shot dead
சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் சுட்டுக்கொல்லப்பட்டது அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே நடந்த தகராறில், இவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐரோப்பிய நாடான நெதர்லாந்தைச் சேர்ந்த 32 வயதான மார்கோ எப்பன் சர்வதேச போதை பொருட்கள் கடத்தும் கும்பல்களில் மிக முக்கியமானவர். கடந்த, 2014-இல், தென் அமெரிக்க நாடான பிரேசிலில் இருந்து நெதர்லாந்துக்கு 'கோகைன்' கடத்திய வழக்கில் ஏழு ஆண்டு சிறைத்தண்டனை பெற்று, அதன் பின் தலைமறைவானார்.
-bdnfh.jpg)
இதையடுத்து, ஐரோப்பிய கூட்டமைப்பு புலனாய்வு அமைப்பான, 'ஈரோபோல்' அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருந்தாது. மார்கோ எப்பன் நெதர்லாந்தில் இருந்து தப்பிய துபாய், ரஷ்யா, இத்தாலி, துருக்கி மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளில் தலைமறைவாக இருந்துள்ளார்.
இந்நிலையில், மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுக்குள் நடந்த தகராறில், மார்கோ எப்பன் நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தலைநகர் மெக்சிகோ சிட்டியில் இருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ள அடிஜாபன் டே ஜராகோஸா என்ற இடத்தில் கார் பார்க்கிங் பகுதியில், மார்கோ எப்பன் சடலம் கிடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மார்கோ எப்பன் உடலில் 15 குண்டுகள் பாய்ந்திருந்ததாக மெக்சிகோ போலீசார் உறுதி செய்துள்ளனர். அமெரிக்காவால் தேடப்பட்டு வந்த ஹம்பர்டோ ரிவைரோ என்ற போதைக்கடத்தல் மன்னனை மெக்சிகோ போலீசார் சமீபத்தில் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் தொடர்ச்சியாக, போதைக் கடத்தல் கும்பல்களுக்குள் நிகழ்ந்த அதிகாரப் போட்டியில் மார்கோ எப்பன் கொல்லப்பட்டதாக மெக்சிகோ போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
The wanted international drug kingpin has been shot dead