பீர் கேனில் மகாத்மா காந்தி படம்; இந்தியாவை அவமானப் படுத்திய ரஷ்யா..!
Mahatma Gandhis image on beer cans Russia humiliated India
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பீர் கேன்களில் மகாத்மா காந்தி படம் இடம் பெற்றுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய மது பிராண்டான ரிவோர்ட் தயாரித்த பீர் கேன்களின் படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளன. இந்த பீர் கேன்களில் காந்தி படம் இடம் பெற்றுள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, முன்னாள் ஒடிசா முதல்வர் நந்தினி சத்பதியின் பேரன் சுபர்னோ சத்பதி, 'இந்திய அதிகாரிகள் இந்த விஷயத்தை ரஷ்யாவுடன் எடுத்துச் சென்று தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரிகை வைத்துள்ளார்.

இது குறித்து சுபர்னோ சத்பதி, ''ரிவோர்ட் நிறுவனம் காந்தியின் படத்துடன் பீர் விற்பனை செய்வது அவமரியாதைக்குரிய செயல். இதை, ரஷ்ய அதிபருடன் இந்திய பிரதமர் தொடர்பு கொண்டு பேசி முடிவுக்கு கொண்டு வர வேண்டும்,'' என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், அமைதி மற்றும் மதுவிலக்கின் சின்னமான மகாத்மா காந்தியை அவர்களை இவ்வாறு பீர் கனின் பிரிண்ட் செய்திருப்பது, அவரை கேலி செய்வதாக உள்ளது என்றும், இந்தியர்கள் அனைவருக்கும் அவமானம் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
English Summary
Mahatma Gandhis image on beer cans Russia humiliated India