மேற்கத்தைய நாடுகள் 'ஜனநாயகத்தை பேசுவதை விட்டு, செயல்படுத்துங்கள்' என்கிறார் வெளியுறவு துறை அமைச்சர்..! - Seithipunal
Seithipunal


​மேற்கத்திய நாடுகள், முதலில் தாங்கள் ஜனநாயகத்தை பற்றி பேசுவதை செயல்படுத்தட்டும் என, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். ஜெர்மனியின் மியூனிக் நகரில்,61-வது மியூனிக் பாதுகாப்பு மாநாடு நடந்து வருகிறது. இதில் பல்வேறு சர்வதேச மற்றும் பாதுகாப்பு கொள்கை தொடர்பாக விவாதிக்கப்படும். இதில் ஜெய்சங்கர் கலந்துகொண்டு பேசியுள்ளார். 

அத்துடன் அங்கு அவர் கூறுகையில்; ''ஜனநாயகம் என்பதை மேற்கத்திய நாடுகளின்  அடையாளமாக நினைக்கின்றனர். அதே நேரத்தில் உலகின் மற்ற நாடுகளில் ஜனநாயத்துக்கு எதிரான அமைப்புடன் கைகோர்க்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். 

அங்கு ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் ஓட்டளிப்பு என்பது தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதில், நார்வே பிரதமர் ஜோனஸ் கார்ஹ் ஸ்டோர், அமெரிக்க எம்.பி., எலிசா, வர்சோவா மேயர் ரபால் டோராஸ் கோவ்ஸ்க் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் சர்வதேச அளவில் ஜனநாயகத்துக்கு ஆபத்து உள்ளதாகவும், ஜனநாயகம் உணவு அளிக்காது என்றும் கூறியுள்ளனர். இதற்கு பதில் அளிக்கும் வகையில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:

சமீபத்தில் நடந்த டில்லி சட்டசபை தேர்தலில் ஓட்டளித்தேன். அதன் மை இன்னும் அழியவில்லை. கடந்தாண்டு பாராளுமன்ற தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 90 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களில், 70 கோடி பேர் ஓட்டளித்தனர். அந்த ஓட்டுகள் அனைத்தும் ஒரே நாளில் எண்ணப்பட்டன என்றுய் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அவர், 'கடந்த, 10 ஆண்டுக்கு முன்பு இருந்ததைவிட, தற்போது ஓட்டு சதவீதம் அதிகரித்து வருகிறது. ஜனநாயகத்தின் மீது இந்திய மக்களுக்கு பெரும் நம்பிக்கை உள்ளது. அதனால் ஜனநாயகத்துக்கு ஆபத்து என்பது ஒரு குறிப்பிட்ட நாடுகளில் வேண்டுமானால் இருக்கலாம். பொதுப்படையாக கூற முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அவர். 'ஜனநாயகம் உணவு வழங்காது என்பதையும் மறுக்கிறேன். உண்மையான ஜனநாயக நாடாக உள்ளதால், இந்தியாவில் மக்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்கிறது. மக்கள்தொகையில், 80 கோடிக்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் ஜனநாயகம், மக்களுக்கு தேவையான பலன்களை வழங்குகிறது. மேற்கத்திய நாடுகள், ஜனநாயகம் என்பதை தங்களுடைய அடையாளமாக, தாங்கள் உருவாக்கியதாக நினைக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

'அதே நேரத்தில் உலகின் மற்ற பகுதிகளில் ஜனநாயகத்துக்கு எதிரான அமைப்புகளுடன் கை கோர்க்கின்றன. தற்போதும் அது தொடர்கிறது. முதலில் தாங்கள் சொல்வதை, மேற்கத்திய நாடுகள் பின்பற்றட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதுபோல உலகின் மற்ற நாடுகளில் உள்ள வெற்றிகரமான ஜனநாயக முறைகளை, மேற்கத்திய நாடுகள் பயன்படுத்திக் கொள்ள முன் வர வேண்டும். அந்த வெற்றிகரமான ஜனநாயக முறைகளை, அந்த நாடுகளிடமிருந்து மேற்கத்திய நாடுகள் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

இதனை தொடர்ந்து அவர், பல்வேறு சவால்கள் இருந்தபோதும், மிகவும் குறைவான வருவாய் இருந்தபோதும், ஜனநாயகத்துக்கு உண்மையாக இந்தியா இருந்து வருகிறது. அது போல மற்ற நாடுகளில் உள்ள ஜனநாயகத்தையும் மதிக்கிறோம் வேண்டும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Stop talking about democracy implement it says the Foreign Minister


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->