தடையை மீறிய அசாம் அரசு - நீதிமன்றம் எடுத்த அதிரடி நடவடிக்கை.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் குறிப்பாக வடமாநிலங்களில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது எனக்கூறி உள்ளூர் அதிகாரிகள் புல்டோசர் இயந்திரத்துடன் சென்று வீடுகளை தரைமட்டம் ஆக்குவது தொடர்கதையாகி வருகிறது.

இதேபோல், சிறிய குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகளையும் மாநகராட்சிகள் தன்னிச்சையாக புல்டோசர் கொண்டு இடித்து வருகின்றன. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது வரும் அக்டோபர் மாதம் 1 தேதி வரை புல்டோசர் நடவடிக்கைகளுக்கு இடைக் கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில், அசாம் மாநிலத்தில் உள்ள காம்ரூப் மாவட்டத்தில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு எனக்கூறி 47 குடும்பங்களின் வீடுகளை அரசு இடித்துள்ளது. 

வீடுகளை இழந்த 47 குடும்பங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிமன்ற அனுமதி இல்லாமல் இடைக்காலத் தடை அமலில் உள்ளபோது வீடுகளை இடித்துள்ளதால் அசாம் அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது. நீதிபதிகள் பி.ஆர்.கவை, கே.வி.விஸ்வநாதன் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு, 3 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டதுடன், அடுத்த விசாரணை வரை தற்போதைய நிலையே தொடரும் என்று உத்தரவிட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

supreme court notice send to assam government for house collapse


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->